Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியிலிருந்து 'டிம் குக்' (Tim Cook) விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 செப்டம்பர் 1ஆம் திகதி முதல் Apple நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக 'ஜோன் டர்னஸ்' (John Ternus) பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோன் டர்னஸ் தற்போது அந்த நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் (Hardware Engineering) பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவராகப் பணியாற்றி வருகின்றார்.
இதேவேளை, CEO பதவியிலிருந்து விலகும் டிம் குக், Apple நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் (Executive Chairman) ஆகப் பொறுப்பேற்பார் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.