கனேடிய பொலிஸார் கனடா வாழ். முஸ்லிம் சமூகத்தினருக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். கனடாவில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் கொள்ளை மற்றும வழிப்பறி தொடர்பிலேயே கனேடிய பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
2024 ஒக்டோபர் முதல் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் முஸ்லிம்களை நாடி வந்து சலாம் கூறிவிட்டு அருகிலிருக்கும் பள்ளிவாசல் குறித்து கேட்டுகொள்வது போல் பேசிக்கொண்டிருக்கும் சிலர் இவ்வாறு செய்வதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இன்னும் சில இடங்களில் நகைக் கடைகளுக்கு சொன்று புதிய நகையை அணிந்து பார்ப்பதற்காக சொந்த நகைகளை அகற்றும் வேளையில் அவற்றை திருடிச் செல்லும் கும்பல் ஒன்றும் இயங்கி வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் நகைகளை இலகுவாக அகற்ற முடியாதவாறு அணியுமாறும் அறிமுகம் இல்லாதவர்கள் மிக நெருக்கமாக பேசும் போது அவர்கள் தொடர்பில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் சந்தேகத்துக்கு இடமானவர்களை காணும் பட்சத்தில் விரைந்து அவர்களின் அடையாளத்தை பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.