தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் Ontario மாகாணத்தின் Brampton நகரில் திறந்து வைக்கப்படவுள்ளது.
Chinguacousy பூங்காவில் May மாதம் 10-ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக இந்த தமிழின அழிப்பு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.