வடக்கிலே ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அரசு மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறவேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
இன்று காலை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்