Scarborough Piper Arms மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு உட்பட பல வன்முறை சம்பவங்கள் குறித்து குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விசாரணையில் மற்றொருவர் தேடப்படுகிறார்.
GTA முழுவதும் பல வன்முறை சம்பவங்கள் குறித்து குற்றச்சாட்டுகளுக்காக 10 ஆண்கள் Toronto காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதில் கைதானவர்கள் 15 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர்கள்:
Toronto நகரை சேர்ந்த 17 வயதான ஆண்,
Toronto நகரை சேர்ந்த 21 வயதான ஆண் Prayer Osakpemwehuan,
Toronto நகரை சேர்ந்த 21 வயதான ஆண் Robert Gidisu,
Toronto நகரை சேர்ந்த 20 வயதான ஆண் Daykwon Joseph,
Toronto நகரை சேர்ந்த 19 வயதான ஆண் Sheldon Gordon,
Toronto நகரை சேர்ந்த 19 வயதான ஆண் Juevar Griffith,
Toronto நகரை சேர்ந்த 22 வயதான ஆண் Kayjean Morrison,
Toronto நகரை சேர்ந்த 19 வயதான ஆண் Nicoy Brooks,
Toronto நகரை சேர்ந்த 17 வயதான ஆண்,
Toronto நகரை சேர்ந்த 19 வயதான ஆண் Joshua Clarke-Richards,
Toronto நகரை சேர்ந்த 15 வயதான ஆண்,
தேடப்படும் சந்தேக நபர்:
Toronto நகரை சேர்ந்த 20 வயதான ஆண் Daykwon Joseph.
தேடப்படும் சந்தேக நபர்
கைதான 10 பேருக்கு எதிராக, 24 கொலை முயற்சி குற்றங்கள் உட்பட 203 குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணையில் நான்கு துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.
இதில் March 7 நிகழ்ந்த Piper Arms மதுபான விடுதி துப்பாக்கி சூடு குறித்து குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.
தமிழர்களுக்கு சொந்தமான Scarborough Piper Arms மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Lankathas Pathmanathan)