Brampton தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
Brampton நகரில் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் சில வாரங்களில் இரண்டாவது முறையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.
Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் May மாதம் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக இந்த தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டது.
இந்த நினைவகம் சனிக்கிழமை (14) நள்ளிரவுக்கு பின்னர் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நினைவகத்தின் மின் விளக்குகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது தேசியத்திற்கு ஞாயிறு (15) காலை கிடைத்த ஒளிப்பதிவில் உறுதியாகிறது
முன்னரும் இந்த நினைவகம் சேதப்படுத்தப்பட்டதாக முறையிடப்பட்டது.
கடந்த மாதம் 27-ஆம் திகதி இந்த நினைவகம் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.