முதியோர் ஆரோக்கியமாகவும், சுதந்திரமாகவும் இருக்க ஒன்ராறியோ $7 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

முதியோர்சமூகரீதியாகஇணைக்கப்பட்ட,ஆரோக்கியமானவாழ்க்கையைஆதரிக்க,வரலாற்றுரீதியானசமூகதிட்டங்களுக்கும், முதியோர்செயல்பாட்டுமையங்களுக்கும்ஒன்ராறியோமாகாணஅரசாங்கம்ஆதரவளிக்கிறது.

 

முதியோரைப்பாதுகாக்கஒன்ராறியோஅரசாங்கம்இவ்வாண்டு $7 மில்லியன்நிதியைமுதலீடுசெய்கிறது. முதியோர்ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், சமூகரீதியாகஇணைக்கப்படுவதற்கும்இந்தஉதவிகள்வழங்கப்படுகின்றன.

 

ஸ்காபரோதொகுதியில் Frontline Community Centre உள்ளிட்டஐந்துசமூகசெயல்பாட்டுமையங்கள்சுமார்$125,000 நிதியுதவியைப்பெறுகின்றன. இந்தமானியத்தைஉத்தியோகபூர்வமாகவழங்குவதற்கானஆவணரீதியானபணிகள்தற்போதுநடைபெற்றவருகின்றன.

 

மாகாணம்முழுவதும்330 இற்கும்மேற்பட்டசமூகத்திட்டங்களைஅரசாங்கம்ஆதரிக்கிறது. முதியோர்சமூகமானியத்திட்டம் (SCGP), முதியோரின்சுதந்திரத்தைஅதிகரிக்கவும், சமூகதனிமைப்படுத்தலைக்குறைக்கவும், நேர்மறையானதொடர்புகளைஉருவாக்கவும்உதவும்வகையில்இந்தநிதிஒதுக்கப்பட்டுள்ளதுடன்ஒன்ராறியோமுதியோர்மாதத்தைக்குறிக்கும்வகையில்இந்தஆதரவுஇம்மாதம்வழங்கப்படுகிறது.

 

“பொருளாதாரநிச்சயமற்றதன்மை, அதிகரித்துவரும்செலவுகளுக்குமத்தியில், ஒன்ராறியோமுதல்வர்டக்ஃபோர்ட்தலைமையிலானஎமதுஅரசாங்கம், எங்கள்முதியோரைப்பாதுகாப்பதில்உறுதிபூண்டுள்ளது. இதன்மூலம்முதியோருக்குநம்பகமானசமூகஆதரவுகிடைப்பதைஉறுதிசெய்வதிலும்பெருமைகொள்கிறது”என்றுமுதியோர்விவகார, அணுகுமுறைஅமைச்சரும்ஸ்காபரோவடக்குத்தொகுதியின்சட்டமன்றஉறுப்பினருமானரேமண்ட்சோதெரிவித்தார்.

 

“முதியோர்சமூகமானியத்திட்டம்எங்கள்மாகாணத்தின்ஒவ்வொருஇடத்திலும், முதியோர்புதியதிறன்களைக்கற்றுக்கொள்வதற்கும், உடல்தகுதிபெறுவதற்கும், குழுவாகசெயல்படுவதற்கும், அவர்களின்அயலவர்களுடனும், நண்பர்களுடனும்தொடர்பில்இருப்பதற்கும், ஒருமுக்கியமானஉயிர்நாடியாகஇருக்கிறது'' என்றுஅமைச்சர்மேலும்தெரிவித்தார்.

 

முதியோர்சமூகமானியத்திட்டத்தின்மூலம்உதவிபெறுவோர்உள்ளூர்திட்டங்கள், சேவைகள், நிகழ்வுகளைநடத்ததலா$25,000 வரைபெறமுடியும். இதுமுதியோர்தொடர்பானதன்னார்வத்தொண்டுமற்றும்சமூகஈடுபாட்டிற்கானவாய்ப்புகளைவழங்குகிறது. இந்தஆண்டுமுதியோர்நலன்காக்ககூடுதலாக $1 மில்லியன்முதலீடுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாகமுதியோரின்வாழ்க்கைத்தரத்தைமேம்படுத்தும்பின்வரும்திட்டங்களும்உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

* யோர்க்பிராந்தியத்தில்அத்தியாவசியசமூகநிகழ்ச்சிகளுடன்கிராமப்புறமுதியோரும்பங்குகொள்ளும்வகையில்கட்டணமில்லா, வசதியானபேருந்துசேவைஉள்ளடக்கம்.

 

* இளைஞர்களுடன்முதியோர்இணைந்துதொடர்ச்சியானகலைப்படைப்புக்களைமுன்னெடுக்கவும், மார்க்கத்தில்அவர்களின்கலைப்படைப்புக்களைக்காட்சிப்படுத்தவும்ஒத்துழைத்தல்

 

* கிழக்குஒன்ராறியோவில்ஒருதொழில்முறைகலைஞரின்தலைமையில்வாராந்திரகலைப்பட்டறைகள், கண்காட்சிகளைமுதியோருக்குவழங்குதல்

 

* வடக்குஒன்ராறியோவைச்சுற்றியுள்ளபின்தங்கியகிராமங்களில்டிஜிட்டல்கல்வியறிவு, நல்வாழ்வுகருத்தரங்குகளைஒழுங்குசெய்தல்

 

வீட்டிற்குஅருகிலுள்ளநிகழ்வுகள், செயல்பாடுகள்ஆகியவற்றுடன்முதியோரைஇணைக்கும்சேவைகளுக்கானஅணுகுமுறையைஅதிகரிக்கவும்ஒன்ராறியோவில்400 இற்கும்மேற்பட்டமுதியோர்செயல்பாட்டுதங்குமிடமையங்களை (SALCs) விரிவுபடுத்துகிறது.

 

முதியோர்செயல்பாட்டுமையங்கள்முதியேரின்நல்வாழ்வு, தொடர்புகள்ஆகியவற்றைஊக்குவிக்கின்றன. அத்துடன்முதியோரைதங்கள்சமூகங்களுக்குள்சுறுசுறுப்பாகவும், சுதந்திரமாகவும், ஈடுபாட்டுடனும்வைத்திருக்கஉதவுகின்றன.

 

அத்துடன் 2025-26 ஆம்ஆண்டில்நடைபெறும்எனஎதிர்பார்க்கப்படும் 100 இற்கும்மேற்பட்டமுதியோர்செயல்பாட்டுவாழ்வியல்கண்காட்சிகளுக்குஅரசாங்கம்ஆதரவளிக்கிறது. இதுமுதியோர்சமூகத்தில்தங்களுக்குள்ளஆதரவுமற்றும்வளங்களைப்பற்றிஅறியஅதிகவாய்ப்புகளைவழங்குகிறது.

 

65 வயதிற்குமேற்பட்டமுதியோரின்எண்ணிக்கை 2022 ஆம்ஆண்டில் 2.8 மில்லியனாகஇருந்தது. இதுமக்கள்தொகையில் 18.4 சதவீமாகும். இந்தஎண்ணிக்கை 2046 ஆம்ஆண்டில் 4.4 மில்லியன்அல்லது 20.3 சதவீதமாககணிசமாகஅதிகரிக்கும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc