Markham நகரசபையின், 7-ஆம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை முதலாவது தமிழர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் மூலம் புதிய நகரசபை உறுப்பினர் தெரிவாகவுள்ளார்.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை தமிழரான கிள்ளி செல்லையா தேசியத்திடம் வெளிப்படுத்தினார்.
எதிர்வரும் திங்கட்கிழமை (30) முதல் இடைத் தேர்தலுக்கான நியமனங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் முதலாவது நாள் தனது நியமனத்தை பதிவு செய்யவுள்ளதாக கிள்ளி செல்லையா உறுதிப்படுத்தினார்.
2018 நகரசபைத் தேர்தலில் Markham நகரசபையின், 7-ஆம் வட்டாரத்தில் கிள்ளி செல்லையா போட்டியிட்டிருந்தார்.
5 தமிழர்கள் உட்பட மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் அவர் 1,961 வாக்குகளை பெற்று நான்காவது இடத்தைப் பெற்றார்.
இந்தத் தொகுதியை Khalid Usman 3,308 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
அண்மைய பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் Pickering–Brooklin தொகுதியில் போட்டியிட்ட Markham நகரசபையின் 7-ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் ஜுனிதா நாதன் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் அவரது நகரசபை உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் 7-ஆம் வட்டாரத்திற்கான நகரசபை உறுப்பினரை இடைத் தேர்தல் மூலம் தெரிவு செய்யும் முடிவை Markham நகரசபை இந்த எடுத்துள்ளது.
இடைத் தேர்தல் வாக்களிப்பு September அல்லது October ஆரம்பத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கான செலவு $300,000 என மதிப்பிடப்படுகிறது