Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நான்காவது தமிழராக அனிதா ஆனந்தராஜன் தாக்கல் செய்துள்ளார்.
Scarborough-Rouge Park தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் இந்த தொகுதி வெற்றிடமானது.
இங்கு Toronto நகர சபை உறுப்பினர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முதல் நாளான திங்கட்கிழமை (23) மொத்தம் ஏழு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (24) அனிதா ஆனந்தராஜன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
அனிதா ஆனந்தராஜன் Liberal கட்சியின் சார்பில் கடந்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் மூன்று தமிழர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களான அனு ஸ்ரீஸ்கந்தராஜா, நீதன் சான் ஆகியோர் திங்களன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வீடு விற்பனை முகவர் சியான் சின்னராஜா செவ்வாயன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனு August 15-ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதியும், முன்கூட்டிய வாக்களிப்பு September 20 , 21-ஆம் திகதிகளிலும் நடைபெறும் .
இந்த இடைத்தேர்தல் $550,000 செலவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது