செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை (17) இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலைய முன்றலில் செம்மணி புதைகுழி விவகாரத்தை தென்னிலங்கையின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சிவில் சமூகம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஓன்றை முன்னெடுத்துள்ளது.
முன்னெடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.