யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (26) சனிக்கிழமை 11 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இரண்டு பகுதிகளில் இருந்தும் இன்றைய தினம் 09 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 30 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் போது, இன்றைய தினத்துடன் 90 என்புத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
யாழ். நீதிமன்ற நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகள் தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.