முன்னர் நகரசபை உறுப்பினராகப் பணியாற்றிய ஜெனிபர் மெக்லீவி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றதனால் வெற்றிடமாக உள்ள ரொறன்ரோ நகர சபையின் SCARBOROUGH ROUGE PARK -WARD-25 வட்டாரத்திற்கான இடைத்தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ளது அனைவரும் அறிந்ததே.
மேற்படி ரொறன்ரோ நகர சபையின் SCARBOROUGH ROUGE PARK -WARD-25 வட்டாரத்திற்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுவது கவனிக்கத்தக்கது
விரைவில் நடைபெறவுள்ள ரொறன்ரோ நகர சபையின் SCARBOROUGH ROUGE PARK -WARD-25 வட்டாரத்திற்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் சியான் சின்னராஜாவிற்கு தனது ஆதரவை வழங்கவுள்ள ஒன்றாரியோ மாகாண அமைச்சர் றேமண்ட் ; சோ அவர்கள் சியான் சின்னராசாவை நேரடி;யாகச் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் தொழில் அதிபரும் ஈழத்தமிழரான சியான் சின்னராஜா அவர்களை வாழ்த்த விரும்புவோர் 416 882 0118 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.