காசா நகரத்தை கைப்பற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் திட்டத்துக்கு, கனடா உட்பட உலகின் பல நாடுகள் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன.
கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காசாவை கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் காசாவில் மற்றொரு பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதனை கண்டிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் நடவடிக்கையானது காசாவின் மனிதாபிமான நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் பணயக்கைதிகளின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா வாழ் மக்கள் பாரியளவில் இடம்பெயர நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.