ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராக கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அண்மைக்காலமாக பல்வேறு வழிகளில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில் அதற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஊடகவியலாளர்கள் மற்றும் சமுக அமைப்புகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து, அவர்கள் சுதந்திரமாகப் பணி செய்வதை உறுதி செய்,
ஊடகவியலாளர்களை ஒடுக்குவதை உடனே நிறுத்து, ஊடகவியல் குற்றமில்லை போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட
பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன இந்தப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.