1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்ற ''உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்' தாயகத்திற்கு அப்பால் தமிழர் மரபையும் பண்பாட்டையும் பேணும் பணிகளை தொடர்வதைக் காண்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். யாழ்ப்பாணத்தில்ழ அந்தக் காலப்பகுதியில் நடைபெற்ற தமிழாராச்சிய மாநாட்டினை குழப்பும் நோக்குடன் தாக்குதல்களில் ஈடுபட்ட பொலிஸாரின் செயலால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்பின் கொடுமையை உலகிற்கு எடுத்துச் செலலும் பாரிய பொறுப்புடன் ஆரம்பிக்கப்பெற்ற இந்த அமைப்பு தற்போது உலகின் பல நாடுகளில் கிளைகளை நிறுவி அரிய சேவைகளை ஆற்றிவருவதை நான் நேரயாகவே காண்கின்றேன். எனவே இந்த முயற்சியில் ஈடுபட்டு அயராது உழைக்கின்ற அனைத்து இயக்குனர் சபை உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் இன்றைய நாளின் சிறப்புப் பேச்சாளர் இசைக்கவி ரமணன் அவர்களுக்கும் கனடா தமிழ்க் கவிஞர்கள் கழகம் வழங்கிய கவியரங்கம் சிறப்பாகவும் உற்சாகமாகவும் நடைபெற பங்களித்த அனைத்து கவிஞர் பெருமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்"
இவ்வாறு, மேற்படி உ லகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கடந்த 30ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் அமைந்துள்ள பைரவி நுண்கலைக் கூட த்தின் கலையகத்தில் நடைபெற்ற 'உங்களோடு இசைக்கவி ரமணன்' விழாவில் சிறப்புரையாற்றிய மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி புகழாரம் சூட்டினார்.;
உ லகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையின் தவைரும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லோகன் லோகேந்திரலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்
கவியரங்கம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த இசைக்கவி ரமணன் அவர்கள் வழங்கிய 'கவிஞர் கண்ணதாசனும் நாமும்' என்னும் பல்சுவை கலந்த இலக்கிய உரையின் போது இசைக்கவி அவர்கள் கண்ணதாசன் அவர்களது திரையிசைப் பாடல்களை இனிமையாகப் பாடிப் பாடி தனது உரையை வழங்கினார் என்பதும் அங்கு சபையில் அமர்ந்திருந்த அனைவரும் அதனை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்து இறுதியில் அவரோடு இணைந்து புகைப்படமும் எடுத்துச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.