24-08-2025 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடா- பிக்கரிங் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்ஜோதி சிவாலயத்தின் பரிபாலன சபையினர் நடத்திய 'ஆன்மீகப் பெருவிழா'வில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறார்களுக்காக நடத்தப்பெற்ற பண்ணிசைப் போட்டி மற்றும் தேவார மனனப் போட்டிகளில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த விழாவிற்கு பிரதம விருந்தினராக கனடா வாழ்' பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்தார்.
மேற்படி பிக்கரிங் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்ஜோதி சிவாலயத்தின் பரிபாலன சபையினர் நடத்திய 'ஆன்மீகப் பெருவிழா'வில் முக்கிய நிகழ்வாக தமிழ்க் கனடியர்களில் 15 பேருக்கு சிறப்பு விருதுகள் ஒவ்வொரு பெயரில் வழங்கப்பெற்றன.
விருது பெற்றவர்களில் எமது பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் டாக்டர் குமாரசாமி கிருபானந்தன் மற்றும் உதயன் லோகேந்திரலிங்கம்- அனலை எக்ஸ்பிரஸ் விமல்டி தவராஜா மற்றும் பி. எஸ். சுதாகரன் ஆகியோரும் அடங்கியிருந்தார்கள்.
கலை நிகழ்ச்சிகள் ரசிக்கும் வகையிலும் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்யும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி ஆன்மீகப்பெருவிழாவில் விருதுகளைப் பெற்றவர்கள் பின்வருமாறு:-
----------------------------------
சிவஶ்ரீ தீர்த்தனராஜக்குருக்கள் சிவசாமி ஐயர்.
திருமதி விஜயலக்சுமி சீனிவாசகம்- இசைத்துறை
திரு எம். பி. நாகேந்திரம்- இசைத்துறை
திரு.அமுதீசன்
டாக்டர் கு. கிருபானந்தன்- மகப்பேறு மருத்துவம்
திருமதி பத்மினி ஆனந்த்- பரதக் கலை
திரு லோகன் லோகன் லோகேந்திரலிங்கம்- கலை இலக்கியம் மற்றும் ஊடகத்துறை
திரு உதயன் செல்வரட்னம்
திரு விமல் தவராஜா ஊடகம் மற்றும் கலை.
திரு. பி.எஸ் சுதாகரன்- ஊடகம் மற்றும் சினிமாத்துறை
திரு. டினேஸ் ரட்னசிங்கம்
யுனிற்றா நாதன்- அரசியல் மற்றும் சமூக சேவை
திருமதி ரவீனா ராஜசிங்கம்- மருத்துவம்- சமூக சேவை
திரு. பாலகங்காதர திலக் சோமசுந்தரம்
மேற்படி பிக்கரிங் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்ஜோதி சிவாலயத்தின் பரிபாலன சபையினர் நடத்திய பிக்கரிங் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்ஜோதி சிவாலயத்தின் பரிபாலன சபையினர் நடத்திய 'ஆன்மீகப் பெருவிழா'விற்காக அனைத்து ஏற்பாடுகளையும் ஆலயத்தின் பிரதம குரு கலாநிதி சாம்பசிவ சோமஸ்கந்த குருஜீ மற்றும் கோபி குருக்கள் ஆகியோர் தங்கள் உதவியாளர்களுடன் சிறப்பாகச் செய்தார்கள்.
----------------------------------------------------------------
(நன்றி; புகைப்படங்களுக்கு- ரவி அச்சுதன் அவர்கள்- விமர்சனம்;- சத்தியன்)