விஜயரத்தினம் சரவணன்
மன்னாரில் காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனியமணல் அகழ்வு என்பவற்றிற்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் 05.09.2025இன்றும் 34ஆவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் குறித்த தொடர்போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
குறித்த 34ஆவதுநாள் போராட்டத்தினை தோட்டவெளி, ஜோசெப்வாஸ் கிராமமக்கள் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது