கனடா தமிழோசை வானொலி ஏற்பாட்டில் கடந்த 20-09-2025 அன்று சனிக்கிழமை டுறம் பிராந்தியத்தில் நடைபெற்ற `தமிழர் திருவிழா` 300 மேற்பட்ட உள்ளுர் மற்றும் பிறநாட்டுக் கலைஞர்களின் பங்களிப்புக்கள் மற்றும் கலைப் படைப்புக்கள் ஆகியவற்றுடன் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி சிறப்பான நிகழ்வில் செவன்நோட்ஸ் .இசைக் குழுவினர் இனிதான இசையை வழங்க சிறியோர் முதல் வளர்ந்தோர் வரை ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் பாடல்களை மேடையில் வழங்கினார்கள்.
மேற்படி விழாவைச் சிறப்புச் செய்ய தமிழகத்திலிருந்து பாடகர்கள் முகேஸ் மற்றும் ஜீவன் ஆகியோரும் பிரான்ஸ் தேசத்தில் வாழும் நம்நாட்டுக் கலைஞர்களும் அழைக்கப்பெற்றிருந்தனர்.
அந்த வாரத்தில் கனடாவில் நடைபெற்ற பல மேடை நிகழ்ச்சிகளில் தமிழோசை வானொலி நடத்திய மேற்படி தமிழர் திருவிழா ரசிகர்களை மகிழ்வித்தது என்றால் அது மிகையாகாது