கனடாவில் அமையவுள்ள `தமிழ் சமூக மையத்தின்` கட்டட திட்டத்திற்கு நிதி சேகரிக்கும் வகையில் கனடாவில் செயற்படும் தாயகப் உள்ள பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து நடத்திய ஒன்று கூடல் நிகழ்வு கடந்த Sep 20,2025 கடந்த சனிக்கிழமை அன்று Brighton Convention Centre, மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது மத்திய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி- மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் லோகன் கணபதி மற்றும் இணையமைச்சர் விஜேய் தணிகாசலம் மற்றும் ரொறன்ரோ மாநகர முதல்வர் ஒலிவியா சோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்து வாழ்த்துரைகளை வழங்கிச் சென்றார்கள்.
இந்த நிகழ்வின் போது பல்வேறு பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் உயர்தரப் பிரிவு மாணவர் அமைப்புகள் மற்றும் பழைய மாணவர்கள் என அனைவரும் இணைந்து 400,000 டொலர்களுக்கான நிதி உதவி உத்தரவாதத்தை வழங்கியிருந்தனர்.
மேற்;படி நிதி சேர் நிகழ்வில் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் 10000 டாலர்களை விருப்புடன் வழங்கினார்கள். விஜயா நகை மாளிகையின் அதிபர் ரூபன் அவர்கள் ஐம்பதாயிரம் டாலர்களை வழங்கினார். மேலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் இணைந்து ஒரு இலட்சம் டாலர்களையும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் இணைந்து 60 ஆயிரம் டாலர்களையும் உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் இணைந்து 30 ஆயிரம் டாலர்களையும்கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் இணைந்து 30 ஆயிர வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்:- ஐயா4யு மற்றும் சத்தியன்