கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்து ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் வளாகத்தின் Highland Hall, என்னும் விசாலமான மாநாட்டு மண்டபத்தில் இந்தப் பெருவிழா பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.
இணை அமர்வுகள்.
அமர்வு 14ல் நேரடியாக
தனிநாயக அடிகள் அரங்கில்,
அரசியல், தத்துவம், வணிகம் (ஆங்கிலத்தில்) எனும் பொருண்மையில்,
முனைவர் டெனிசன் ஜெயசூர்யா தலைமையில்,
Mr. Ambalavanar Kandeepan, Thirukkural and the Govenance of Democracies in the 21ar Century
Dr. S. Muthiah, Truth and Friendship: A Comparative study of Thiruvalluvar and Francis Bacon
Dr. Swaminathan Arulsamy, Timeless Wisdom in a Digital Age: Applying Thirukkural in all Govenance
Mr. Kumar Punithavel, Thirukkural on Governance of Modern Corporate Bussiness
Prof. Dr. Uthayan Thurairajah, Governance and Statecraft in Thirukkural: A Comparative Philosophical Study into Stately Ethics and Governance
ஆகியோரின் உரைகள் நடைபெற்றன.
அமர்வு 15ல், இணையவழி
க. பொ. இரத்தினம் அரங்கில்,
பொருட்பால் பொது (ஆங்கிலம்/தமிழ்) மொழிகளில்,
முனைவர் கெளசல்யா சுப்ரமணியம் தலைமையில்,
Dr. Tamil Selvi, Thirukkural porutpaal A holistic Approach ith reference Wealth, Ethics and Economical Thought
டாக்டர் யோகாச்சாரிய நீலுமேகம்: குறளில் பொருட்பா கண்ணோட்டம்
முனைவர் இரா. கார்த்திகேயன், வள்ளுவர் காட்டும் பொருட்பால் வைப்பு முரை
முனைவர் எஸ். மோசேஸ், திருக்குறளின் பொருட்பாலும் சேக்ஸ்பிர்யரின் நாடகங்களும்: மானுட விழுமியங்கள் மற்றும் உலகியல் பார்வை குறித்த ஒப்பாய்வு
முனைவர் சண்முக. செல்வகணபதி
திருக்குறள் பொருட்பால் காட்டும் சான்றோன்
எனும் தலைப்புகளில் உரையாற்றினர்.
அமர்வு 18ல் இணையவழி,
ஆறுமுக நாவலர் அரங்கில்,
ஒப்பாய்வு- இலக்கியம் எனும் பொருண்மையில்
திரு. குமரகுரு தலைமையில்,
திரு அ. துரை முகிலன், திருக்குறளும் கவிஞர் தமிழ்க்குழவியின் அப்துல் கலாம் பிள்ளைத்தமிழும்
முனைவர் அ. உமாமகேஸ்வரி, அறநெரி புறநானூறு – திருக்குறள் ஒப்பாய்வு
முனைவர் இரா. திருமூர்த்தி, திருக்குறளிலும் தொல்காப்பியத்திலும் சமூக நீதிகள்
முனைவர் செ. கற்பகம், ஒப்பியல் நோக்கில் திருக்குறள் பொருட்பால் நட்பதிகாரங்களும் திருக்குறட் குமரேச வெண்பாக்களும்
முனைவர் த. சசிகலா, வசைபாடும் வள்ளுவரும் புறநானூற்றுப் புலவர்களும்
எனும் தலைப்புகளில் உரையாற்றினர்.
அமர்வு 17ல் நேரடியாக,
ஜி.யு. போப் அரங்கில்,
வாழ்வியலும் அறிவியலும் எனும் பொருண்மையில்
முனைவர் இல. சுந்தரம் தலைமையில்
திருமதி இராஜ்மீரா இராசையா, தமிழ்ப்பண்பாட்டு மரபில் திருக்குறளின் வகிபாகம்
திருமதி கோதை அமுதன், திருக்குறளில் வள்ளுவர் பேசும் அங்கங்கள்
திருமதி ஜெயதீபா தனபாலசிங்கம், திருக்குறளும் புறநானூறும்
மருத்துவர் மேரி கியூரி போல், வறுமை வள்ளுவனின் வெளிப்படையான அணுகுமுறை
முனைவர் மெய். சித்திரா, திருக்குறளிலும், தாவோ தே சிங்கிலும் இருமைக் கூறுகள் ஒப்பாய்வு
எனும் தலைப்புகளில் உரையாற்றினர்.
அமர்வு 18ல் இணையவழி,
தனிநாயக அடிகள் அரங்கில்,
அரசியலும் மேலாண்மையும் எனும் பொருண்மையில்,
முனைவர் பார்வதி கந்தசாமி/ முனைவர் முத்தையா தலைமையில்,
திருமதி த. புவனேஸ்வரி, திருக்குறளில் மேலாண்மை பற்றிய இன்றைய எழுத்தாளரின் கருத்துகள்
பேராசிரியர் முனைவர் பெ. கெளரிராஜ், பிளேட்டோ, திருவள்ளுவரின் பொருளியல் சிந்தனைகள்
முனைவர் செ. ராஜேஸ்வரி, அனைத்துலக மனிதனை நோக்கி பருக் ஸ்பினோசாவும் (Baruch Sinoza) திருவள்ளுவரும்
முனைவர் நா. சியாமளா, வள்ளுவன் ஆள்மொழி மேலாண் அறம்
முனைவர் வீ. கார்த்திகேயன், திருக்குறளில் மேலாண்மை பற்றிய இன்றைய எழுத்தாளர்களின் கருத்துகள்
அமர்வு 19ல் இணையவழியில்,
க. பொ. இரத்தினம் அரங்கில்,
வாழ்வியலும் அறிவியலும் எனும் பொருண்மையில்,
முனைவர் சா. அருள்சாமி தலைமையில்,
கலாநிதி சண். பத்மநேசன், திருக்குறளில் அறிவுடைமையும் அதனூடு தமிழர் வாழ்வியற் சிந்தனைகளைப் புரிதலும்
கலாநிதி தி. செல்வமனோகரன், திருக்குறள் சைவசித்தாந்தப் பனுவல்களில் இறைமாட்சி
கவியருவி ச. குமரவேல், திருக்குறள் நவிலும் சான்றோர் பண்பு
பேரா. மரு. எம். ஏ. அலீம், கனவு பற்றி திருக்குறளில்: ஓர் மூளை நரம்பியல் ஆய்வு
முனைவர் சு. சுப்புலெட்சுமி, திருக்குறளில் சித்த மருத்துவம்
எனும் தலைப்புகளில் உரையாற்றினர்.
அமர்வு 20ல் இணையவழியில்,
ஆறுமுகநாவலர் அரங்கில்,
மதமும் இலக்கியமும் ஒப்பாய்வு எனும் பொருண்மையில்
மருத்துவர் இரா. இலம்போதரன் அவர்கள் தலைமையில்
கலாநிதி ஜயந்தினி விக்னராஜன், திருக்குறளில் ஒழிபியற் கருத்துகள்
திருமதி வாணிசிறி சிவபாதசுந்தரம், திருக்குறளும் ஏனைய தமிழ் நீதி நூல்களும்
பேராசிரியர் யா. தா. பாசுகரதாசு, திருவள்ளுவர் காட்டும் அரசாட்சியும் இயேசு கிறித்து காட்டும் இறையாட்சியும்
முனைவர் அ. ஜான் பீட்டர், வள்ளுவமும் விவிலியமும் கூறும் தண்டனைக் கோட்பாடுகள்
முனைவர் பு. இந்திராகாந்தி, திருக்குறளும் திருக்குரானும் காட்டும் அரசும் ஆட்சியும்
எனும் தலைப்புகளில் உரையாற்றினர்.
அமர்வு 21ல் நேரடியாக
ஜி. யு. போப் அரங்கில்
பொது எனும் பொருண்மையில்
திரு த. சிவபாலு தலைமையில்
திருமதி நாகேஸ்வரி சிறிகுமரகுரு, வள்ளுவர் கூறும் அரசியல்
திருமதி நீலாவதி நகுலேசபிள்ளை, திருக்குறளும் சைவ சித்தாந்தமும்
மருத்துவர் போல் ஜோசேப், கண்ணோட்டம்: அதிகாரம் 58 ஓர் உளவியல் கண்ணோக்கு
எனும் தலைப்புகளில் உரையாற்றினர்.
முதன்மை அமர்வு 4ல்
முனைவர் வி. குணபாலசிங்கம், பெரியோரைத் துணைக்கோட, பண்டைய ஆட்சிமரபு குறித்த நோக்கு
திரு. சுப்பிரமணியம் இராசரத்தினம், சொற்களால் தீட்டப்பட்ட உயிரோவியம்
எனும் தலைப்புகளில் உரையாற்றினர்.
நிறைவு விழா
மருத்துவர் இராமநாதன் இலம்போதரன் அவர்கள் நிறைவு விழாத் தலைவர் உரையை ஆற்றினார்.
திரு. வேணுகோபால் சிவக்கொழுந்து, திரு. இராஸ்குமார் குணரட்டினம் ஆகியோர் இளையோர் போட்டிகளின் பரிசளிப்புகளை வழங்கினர்.
முனைவர் இராசேந்திரம் கவுண்டர் தென்னாபிரிக்கா, அவர்கள் நிறைவு விழா உரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் நாகராச ஐயர் சுப்பிரமணியம் அவர்கள் மாநாட்டுத் தொகுப்புரை வழங்கினார்.
முனைவர் ஜி. ஜான் சாமுவேல் அவர்கள், அறிவிப்பு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விபரமளித்தார்.
சிவன் இளங்கோ அவர்கள் நன்றியுரையும், 6ஆவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு இனிதே நிறைவுற்றது. அனைவரும் மன மகிழ்வுடனும், நிறைவுடனும், வீடு திரும்பினர்.