எமது தமிழர் தாயகம் மீது கொண்ட அக்கறை மற்றும் அந்த மண்ணின் அபிவிருத்தி மக்களின் வாழ்வில் மேம்பாடு ஆகியவற்றை நோக்காவும் பணியாகவும் கொண்டு கனடாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு நிறுவப் பெற்ற அமைப்பான FEDERATION OF GLOBAL TAMILS நடத்தும் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு நாளை 10ம் திகதி வெள்ளிக்கிழமையன்று மாலை 5.39 மணிக்கு ஸ்காபுறோ பல்கலைக் கழக வளாகத்தில் சீரான திட்டமிடலுடனும் உணர்வுபூர்வமாகவும் ஆரம்பமாகின்றது.
நாளை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண வைபவத்தில் உலகெங்கிலும் இருந்து மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள பேராளர்கள் மற்றும் கனடிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அழைக்கப்பெற்ற பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை 10ம் திகதி ஸ்காபுறோ பல்கலைக் கழக வாளகத்தில் நடைபெற்வுள்ள இந்த மாநாடு தொடர்ந்து அடுத்த நாளும் அதே இடத்தில் நடைபெறும். இரண்டு நாட்களும் தமிழர் தாயகத்தின் மக்களின் வாழ்வு மேம்பாடு அடைய தேவையான திட்டங்களை தீட்டுவது தொடர்ந்து அவற்றை நடைமுறைப்படுத்துவது போன்ற விடங்களில் உரைகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியன இடம்பெறும். தொடர்ந்து 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் கலந்துரையாடல் மற்றும் இராப்போசன விருந்து ஆகியன இடம்பெறும்.
மேலதிக விபரங்களுக்கு 416 473 5348 அல்லது 416 669 6437 அல்லது 416 888 1128 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்