பல்துறை வித்தகரும் சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவரும் கனடாவில் வெற்றிகரமாக ஊடகத்துறையிலும் இயங்கிவருபவருமான கேதீஸ் அவர்களின் 'தமிழாரம்' தொலைக் காட்சி நிறுவனம் நடத்திய '7 ஸ்வரங்கள்' இளையோர் பாடல் போட்டி முடிவுகள் பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றன.
கடந்த 4ம் திகதி சனிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோவில் அமைந்துளள 'ஒன்றாரியோ தமிழிசைக் கலா மன்றத்தின்' கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி 7 ஸ்வரங்கள்' இளையோர் பாடல் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியில் சிறப்புவிருந்தினர்களாகவும் சிறப்பு நடுவர்களாகவும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பிரபல பாடகர் 'கலைமாமணி ராமு' மற்றும் பாடகி வர்ஷா ஆகியோரும் கனடா வாழ் பாடகி சிம்மை அவர்களும் பங்களித்தார்கள்.
இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பெற்றவர்களிலிருந்து சிறந்த பாடல்களை நேர்த்தியாக பாடிய மூவருக்கு முறையே 1ம்-2ம்-3ம் இடங்கள் வழங்கப்பெற்று அவர்களுக்கு பெறுமதியான பரிசுப் பொருட்களும் பாராட்டுக்களும் வழங்கப்பெற்றன.
அன்றைய மேற்படி 7 ஸ்வரங்கள்' இளையோர் பாடல் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியில் முதலாவது வெற்றியாளராக செல்வி சுயநித்தா சுயந்தன்
2வது வெற்றியாளராக சியானி சுதாகரன் அவர்களும்
3வது வெற்றியாளராக சாய்லக்ஷ்மி சத்தியநாதன் அவர்களும்
Social Media புகழ் பாடகியாக அன்றீனா கெங்காதரன் அவர்களும்
Performer of Series: வெற்றியாளராக சந்தோஷ் குகன் அவர்களும்
பாராட்டுக்களைப் பெற்ற பாடக பாடகிகளாக
அக் ஷனா ஆரூரன்
லக்ஷன் கெங்காதரன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் நகர சபை அங்கத்தவர் நீதன் சண்முகராஜா அவர்களும் அங்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை வாழ்த்திச் சென்றார்கள்.
நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் பாடக பாடகிகளின் பெற்றோர்களும் சபையில் அமர்ந்த வண்ணம் தங்கள் ஆதரவை வழங்கினார்கள்