Scarborough-Rouge Park தொகுதியின் நகரசபை உறுப்பினராக தமிழரான நீதன் சான் பதவியேற்றார்.
திங்கட்கிழமை (29) நடைபெற்ற இடைத் தேர்தலில் நீதன் சான் வெற்றி பெற்று மீண்டும் Toronto நகரசபை உறுப்பினரானார்.
இவர் திருக்குறளில் சத்தியப்பிரமாணம் செய்து நகரசபை உறுப்பினராக பதவியேற்றார்.
Toronto நகர தேர்தல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முடிவுகளின் படி, இந்தத் தேர்தலில் நீதன் சான் 5174 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
Scarborough-Rouge Park தொகுதிக்கான நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.