திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் நேற்று புதன்கிழமையுடன் 29 ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது விவசாய காணிகளை அபகரித்து தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கும் முத்து நகர் விவசாயிகள் தற்போதைய நிலையில் வாழ்வாதாரத்தை இழந்தும் அன்றாட ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
பிரதமரின் இரண்டாம் கட்ட தீர்வுக்கான வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் அதற்காக இன்னும் 04 நாட்களே உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தற்போது தொடராக மழை பெய்துவரும் நிலையிலும் போராட்டம் கைவிடப்படாது முத்து நகர் ஒன்றிணைந்த விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.