வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, "மிடிகம லாசா" என்றும் அழைக்கப்படுகிறார், அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கித்தாரிகளால் புதன்கிழமை (22) துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, பிரதேச சபை அலுவலகத்தில் விக்ரமசேகர தனது உத்தியோகபூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவர் மரணமடைந்துள்ளார்