ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் இருபத்தைந்தாவது ஆண்டு நினைவேந்தல் கடந்த வார விடுமுறையில் கனடாவில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
மயில்வாகனம் நிமலராஜன் October 19, 2000 -ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது இருபத்தைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (18) கனடாவில் நடைபெற்றது.
மயில்வாகனம் நிமலராஜனின் குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட தராக்கி சிவராமின் துணைவியாருடன் இணைந்து நினைவுச் சுடரை ஏற்றி வைக்க நிகழ்வு ஆரம்பமானது.
தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் மலரஞ்சலி நடைபெற்றது.
வணக்கத்திற்குரிய ஜோசப் சந்திரகாந்தன், வணக்கத்திற்குரிய பேனாட், சமூக அரசியல் செயற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி, மயில்வாகனம் நிமலராஜனின் சகோதரி செல்வராணி நிரஞ்சன், மூத்த ஊடக ஆசிரியர் S. திருச்செல்வம், முன்னாள் வீரகேசரி ஆசிரியர் வீ.தேவராஜ், ஊடகவியலாளர் வாசகன் இரட்ணதுரை, சுயாதீன ஊடகவியலாளர் உதயன் S. பிள்ளை ஆகியோர் நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த நிகழ்வின் புகைப்படங்கள் – https://www.facebook.com/share/p/19BY2cbN1A/
தவிரவும் முன்னாள் BBC நிருபர் Frances Harrison, யாழ். ஊடக மைய நிறுவனர் இரத்தினம் தயாபரன், முன்னாள் BBC மூத்த தயாரிப்பாளர் சந்தன கீர்த்தி பண்டார ஆகியோர் ஒளிப்பதிவு ஊடாகவும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஊடகவியலாளர் இலங்கதாஸ் பத்மநாதன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
மயில்வாகனம் நிமலராஜனின் கொலை தொடர்பான பல ஆவணங்களை உள்ளடக்கிய உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்ட குழுவின் அறிக்கை வடிவிலான நூலின் கனடிய வெளியீடும் அங்கு நடைபெற்றது.
மயில்வாகனம் நிமலராஜனின் இரண்டு புதல்விகள், தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்ட இந்த நூலின் முதல் பிரதியை படுகொலை செய்யப்பட்ட தராக்கி சிவராமின் துணைவியாரிடம் கையளித்தனர்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூலின் பிரதிகளை நிமலராஜனின் புதல்விகளும், தராக்கி சிவராமின் பிள்ளைகளும் வழங்கினார்