கொலை குறித்த விசாரணையில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Scarborough நகரில் நிகழ்ந்த கத்திக் குத்து மரணத்தில் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு தமிழருக்கு எதிராக பதிவானது.
இதில் 66 வயதான ஆண் பலியானார்.
Eglinton வீதி கிழக்கு – Danforth வீதி சந்திப்புக்கு அருகாமையில் வியாழக்கிழமை (16) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த Toronto காவல்துறையினர் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரை மீட்டனர்.
உயிர்காக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதில் பலியானவர் 66 வயதான கனநாதன் கணேசநடராஜா என அடையாளம் காணப்பட்டார்.
இது 2025 -ஆம் ஆண்டில் Toronto-வின் 34-ஆவது கொலையாகும்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 57 வயதான குஞ்சிதபதன் நுட்பநாதன் கைது செய்யப்பட்டார்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.