மூத்த ஊடகவியலாளர் லோகன் லோகேந்திரலிங்கம் அவரது குடும்பம் சார்பாக வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிய தருணம்!
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கனடாவில் இயங்கிவரும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர், மூத்த ஊடகவியலாளர் திரு. லோகன் லோகேந்திரலிங்கம், அவரது குடும்பத்தார் சார்பாக தமிழ்ச் சமூக மையத்திற்கு CAD 10,000 நன்கொடையை வழங்கினார்.
அண்மையில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருது வழங்கும் விழாவில், உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இதற்கான காசோலையை வழங்கிய போது அவரது குடும்பத்தாரும் உடனிருந்தனர்.
உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் அவர்கள், தமிழ்ச் சமூக மையத்திற்கு ஆரம்பம் முதலே வழங்கி வரும் ஊடகப் பங்களிப்பிற்கும், உதயன் நிறுவனத்தின் சமூகப் பணிக்கும் தமிழ்ச் சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் பங்களிப்பு கனடா தமிழர் வரலாற்றில் பதியப்படுகிறது! சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் உங்களைப் போன்றர்களின் பங்களிப்பே, இந்த மையத்தை உருவாக்கி வருகிறது.
கனடாவில் தமிழர் வரலாற்றில் நீங்களும் பங்கெடுக்க முன்வாருங்கள்...
Donate: https: www.tamilcentre.ca/donate
முழுமையான விபரங்களை அறிய https://www.tamilcentre.ca/
கனடாவில் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காக உருவாகிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூக மையத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் இதயபூர்வ நன்றி!
ஒன்றாய்க் கட்டி முடிப்போம்