முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொது இடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதியளித்தால் அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் அடிபணிய கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வைத்தியசாலைகளில் முஸ்லிம் தாதியர்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் கலாசார ஆடையணிவது தற்போதைய பிறிதொரு பிரச்சினையாக காணப்படுகிறது. நிகாப் ஆடைக்கு இன்று அனுமதிக் கொடுத்தால் எதிர்காலத்தில் புர்காவுக்கும் அனுமதிக்கு கொடுக்கும் நிலை ஏற்படும்.
முஸ்லிம் மாணவிகள் பாடசாலைக்கு ஹிஜாப் வகையிலான சீறுடை அணிய அனுமதிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச காலத்தில் பாராளுமன்றத்துக்கு தனிநபர் பிரேரணை ஒன்றை கொண்டு வந்தார். சுற்றறிக்கை ஊடாக அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொது இடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதியளித்தால் அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் அடிபணிய கூடாது என தெரிவித்துள்ளா