தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனையான பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு மாநாயக்க தேரர்கள் சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.
இவர் இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.சர்வதேச மட்டத்தில் மென்மேலும் வெற்றிப் பெறுவதற்கு அவரை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்விடயத்தின் இனத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட கூடாது.
வீராங்களை பாத்திமா ஷபியா யாமிக் பற்றி சமூக ஊடகங்களில் பலர் மாறுப்பட்ட பல விடயங்களை பதிவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. அனைத்து விடயங்களிலும் மதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட முடியாது.
கொழும்பில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்