கடந்த 25ம் திகதி சனிக்கிழமை, ஸ்காபுறோ நகர மண்டபத்தில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய இவ்வருடத்திற்கான 'விருது விழா'வில் ஐவர் கௌரவிக்கப்பெற்றனர்.
நூற்றுக்கு அதிகமான பார்வையாளர்களும் கலை இலக்கிய ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்த மேற்படி விழாவில் திருமதிகள் யோகரத்தினம் செல்லையா. கலாநிதி பார்வதி கந்தசாமி. திருவாளர்கள் குரு அரவிந்தன். நகுலசிகாமணி நடனசிகாமணி மற்றும் வி. என். மதியழகன் ஆகிய ஐவர் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றனர்.
சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த மேற்படி விழாவில் விருது பெற்ற ஐவரும் இணையத்தின் தற்போதைய தலைவர் க. ரவீந்திரநாதன் - செயலாளர் வாசுதி நகுலராஜா-பொருளாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாக சபையின் ஏனைய உறுப்பினர்கள் விருதாளர்களோடு இணைந்து எடுத்துக் கொண்ட படம் இங்கு காணப்பெறுகின்றது.