கடந்த 28-10-2025 அன்று செவ்வாய்க்கிழமை கனடாவின் தலைநகர் ஒட்டாவா மாநகரில் நடைபெற்ற 'தீபாவளித் திருநாள்' விழாவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்மற்றும் இந்தியச் சமூகம் சார்ந்த பிரதிநிதிகள். சமய ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள். குருமார்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அன்றைய வைபவத்தில். கனடிய வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அனிற்றா ஆனந்த் அவர்களுடன் நமது தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்களும் ஏனைய பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் அனிற்றா ஆனந்த் அவர்கள் ஹரி ஆனந்தசங்கரியைப் பாராட்டியும் சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டு புகழழாரம் சூட்டினார். ' எமது அமைச்சரவை சகாவான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் 'ஒரு அசத்தலான மனிதர்' மற்றும் எமது அமைச்சரைவையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் முக்கிய பங்களிப்பையும் அவர்கள் வழங்கி வருகின்றார்" என்று புகழாரம் சூட்டிய அவர் அங்கு சமூகமளித்திருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து தனது உரையில் தீபாவளித் திருவிழாவின் புனிதம் பற்றியும் விளக்கமளித்தார்.
இங்கே காணப்படும் படங்களில் Markham Boxgrove Tamil Seniors Club அமைப்பின் தலைவி திருமதி சுந்தரேஸ்வரி யோகராஜா அவரது கணவர் யோகராஜா அவர்கள். வர்த்தகப்பிரமுகர் மற்றும் BEHIND ME INTERNATIONAL MEDIA நிறுவன அதிபர் கனா செல்வா மற்றும் மற்றுமொரு வர்த்தக அன்பர் தனா யோகநாதன் மற்றும் உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் உட்பட திரு கரிகாலன் உட்பட மொன்றியால் வாழ் தமிழ் பேசும் அன்பர்களும் காணப்பெறுகின்றார்கள்.