Posted By: adminon: November 21, 2025In: கனடா Print Email
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் பல்லின மக்களை ஒன்றிணைக்கும் அமைப்பான HERITAGE BEYOND BOARDERTS அமைப்பானது 15ம் திகதி சனிக்கி;ழமையன்று ரொறன்ரோ மாநகரில் நடத்திய பல்கலாச்சார விழா மற்றும் பல்லினங்களைச் சேர்ந்த வெற்றியாளர்களுக்கு பல் கலாச்சார விருது வழங்கும் வைபவம் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன . அமைப்பின் நிறுவனர் NEEL NANDA அவர்கள் கனடாவில் பலம் வாய்ந்த பல்லின ஊடகவியலாளர் அமைப்பான ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA இனது ஒரு சிரேஸ்ட உப தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மேற்படி பல்கலாச்சார விழாவை தனது குழுவினருடன் இணைந்து சிற்பபாக ஏற்பாடு செய்திருந்தார்.
மேற்படி விருதுகள் வழங்கும் பகுதியில் எமது கனடிய தமிழ்ச் சமூக மட்டத்தில் ஊடகம் மற்றும் கலை பண்பாடு ஆகிய தளங்களில் பணியாற்றிய வண்ணம். இரண்டு ஊடகநிறுவனங்களையும் வெற்றிகரமாக நடத்தும் நண்பர்களுக்கு பல்கலாச்சார விருதுகள் வழங்கப்பெற்றன.
Mr. Kengatharan Vinayagamoorthy- GTA Media Inc. மற்றும் இணைய ஊடக நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் மற்றும்
Mr.Ketheeswaran Kumarakulasingam, Thamil Aaram தொலைக் காட்சி மற்றும் இணைய ஊடகம் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஆகிய இருவரும் மேற்படி பல்கலாச்சார விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இங்கே காணப்படும் படங்களில் விருதுகளைப் பெற்ற Mr. Kengatharan Vinayagamoorthy, Mr.Ketheeswaran Kumarakulasingam ஆகிய இருவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் HERITAGE BEYOND BOARDERTS அமைப்பின் இயக்குனர் சபை உறுப்பினர் மற்றும் கனடாவில் பலம் வாய்ந்த பல்லின ஊடகவியலாளர் அமைப்பான ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA இனது ஒரு சிரேஸ்ட உப தலைவரும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லோகன் லோகேந்திரலிங்கம் அவர்களும் காணப்பெறுகின்றார்