ந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை விளக்கீடு முல்லைத்தீவில் சிறப்பாக இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.இந்தநிலையில், இன்றையதினம் (4) வீடுகளில் கார்த்திகை விளக்கீடு இடம்பெற்றிருந்தது.
விசேடமாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டுவரவும் மீண்டும் ஒரு இயற்னை அனர்த்தம் ஏற்படாதிருக்கவும் உயிர் நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் விசேட பிரார்த்தனைகள் செய்து வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.