பெக்கா பள்ளத்தாக்கின் மலைகளில் - பெய்ரூட்டை போல இந்த நாட்களில் மரணம் வானத்திலிருந்து எந்த நேரத்திலும் வரலாம் என்ற நிலை காணப்படுகின்றது.
இஸ்ரேல் ஒரு நாள் முழுவதும் இந்த பகுதியை இலக்குவைத்து வான்தாக்குதல்களை மேற்கொண்டது.ஒரு மணித்தியாலத்தில் 30 வான்தாக்குதல்கள் இடம்பெற்றன.
46 பேர் கொல்லப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது - இந்த எண்ணிக்கை இனிமேல் அதிகரிக்கலாம்.
இஸ்ரேலின் தாக்குதலால் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் உயிருக்காக போராடுகின்றனர்.
அவர்களில் ஆறு வயது சிறுமி நூர் மொசாவியும் ஒருவர் .ரயாக் மருத்துவமனையில் சிறுவர்களிற்கான அதிதீவிரசிகிச்சை பிரிவில் அந்த சிறுமி சுயநினைவி;ன்றி காணப்படுகின்றார்.
அவருடைய சிதறுண்ட தலைப்பகுதி முழுவதும் பாண்டேஜினை காணமுடிகின்றது.
அவருடைய தாயார் அந்த சிறுமிக்கு அருகில் கையில் குரானுடன் அமர்ந்திருக்கின்றார்.
எனது மகள் சிறந்த புத்திசாலி எல்லோருடனும் பழகக்கூடியவர் என்கின்றார் அவர்.
'வீட்டின் சூழலை மிகுந்த வேடிக்கையானதாக மாற்றக்கூடியவர் அவர் இல்லாத தருணத்தில் வீடு வெறுமையாக காணப்படும்,புதியவர்களை சந்திப்பதில் அவருக்கு விருப்பம் என்கின்றார் அவர்"
எனினும் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து இவையனைத்தும் மாறின.
இஸ்ரேலின் தாக்குதலிற்கு சற்று முன்னதாக தனது மகள் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் படத்தை அவர் காண்பிக்கின்றார்.
தாக்குதல் ஆரம்பித்ததும் மகளை பயப்படவேண்டாம் என ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்,அவள் ஆண்டவனை உதவிக்கு அழைத்துக்கொண்டிருந்தால் என்கின்றார் தாயார்.
குண்டு சத்தம் அருகில் கேட்க தொடங்க ரீமா நூர் மற்றும் தனது இரட்டைசகோதரர்களுடன் வீட்டு வாசலில் அச்சத்துடன் பதுங்கியிருந்தார்.
தாக்கப்பட்டால் கட்டிடம் இடிந்துவிழும் என்பதால் நாங்கள் வீட்டிற்குள் செல்லவதற்கு தயங்கினோம் அஞ்சினோம் என்கின்றார் அவர்.
குண்டுசத்தம் மிகவும் தீவிரமாக கேட்டதும்,நூரையும் அவரது சகோதரரையும் நான் தூக்குவதற்குள் ஏவுகணை மிக வேகமாக வந்துவிட்டது என்கின்றார் ரீமா.
ஏவுகணை வெடிப்பினால் முகமட்டிற்கு சிறிய காயம் ஏற்பட்டது,நூர் உயிருக்காக போராடுகின்றார்.
நாங்கள் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவேளை மீண்டும் தலைக்கு மேல் ஆபத்து உருவாகின்றது.விமானத்தின் சத்தத்தையும் அதன் பின்னர் வெடிப்பின் சத்தத்தையும் நாங்கள் கேட்கின்றோம்,அதன் பின்னர் பாரிய வெடிப்பு சத்தம் அது ஜன்னல்களை சிதறடிக்கின்றது மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.
அது மற்றுமொரு வான்தாக்குதல் ரீமாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.
மகளைபார்ப்பதற்கு நூரின்தந்தை வருகின்றார் அவர் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றார்.
எனது மகளை படம்பிடியுங்கள் என்கின்றார் அவர்.
அவளுக்கு ஆயுதங்கள் என்றால் என்னவென்று தெரியாது,எப்படி போரிடுவது என்பது தெரியாது,அவள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தவேளை குண்டுகள் விழத்தொடங்கின,இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தி அவர்களை அவர்களின் பகுதிகளில் இருந்து வெளியேற்ற முயல்கின்றது என்கின்றார் தந்தை.
இஸ்ரேல் தான் ஹெஸ்புல்லா அமைப்பின் ஆயுதக்கிடங்குகளை இலக்குவைப்பதாக தெரிவிக்கின்றது.
எனினும் அப்தெல்லா இதனை மறுக்கின்றார்.
எங்களிற்கும் ஆயுதங்களிற்கும் தொடர்பில்லை நான் எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை,ஆனால் தற்போது நான் எனது பிள்ளைகளை பாதுகாப்பதற்காக போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என கருதுகின்றேன் என்கின்றார் அவர்.