Bootstrap

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு:ஏ.வி.ராஜுக்கு நோட்டீஸ்

கூவத்தூர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் செயலாளர் ஏ.வி.ராஜூவுக்கு அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதிமுகவை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பிரச்னைக்கு திரைப் பிரபலங்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர்

கீழ்த்தரமான, கேவலமான மனிதர்கள் மீது தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே முன்னாள் அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜு, தான் த்ரிஷாவை பற்றி பேசவில்லை எனவும், தன்னை தவறாக சித்தரித்து காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் எனவும், த்ரிஷாவின் மனம் புண்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் செயலாளர் ஏ.வி.ராஜூவுக்கு அதிமுகவின் சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்,  நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வலியுறுத்தப்பட்டது.  மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஏ.வி.ராஜுக்கு அதிமுக வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை நோட்டீஸ் வழங்கினார்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc